பண்டாரவிளையில் திமுக பிரமுகர் மகன் அராஜகம் – மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் புகார்

0
126
thoothukudi s.p

பண்டாரவிளை திமுக பிரமுகர் மகன் அப்பகுதியில் அராஜகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் எஸ்பி யிடம் புகார் மனு அளித்தனர்.

ஏரல் பண்டாரவிளை சுயம்புலிங்க சுவாமி கோவில் தெருவைச் சார்ந்த அன்னலட்சுமி என்பவர் கடந்த 1 ஆம் தேதி தனது வீட்டின் முன்பு சரவணன் என்பவரிடம் நின்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த பண்டாரவிளை திமுக வர்த்தகர் அணி பிரமுகர் சுந்தர்ராஜன் மகன் ஜெயபாலன் அன்னலட்சுமி யை பார்த்து அருவருக்கத்தக்க வகையில் பேசி அவரை தாக்கியதில் அவருக்கு முன்பக்க தலையில் வீக்கம் காயம் கையில் காயமும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெயபாலன் பண்டாரவளையில் உள்ள பொன் ராமசாமி என்பவர் பெட்டிக்கடைக்கு சென்று அவரது மகன் பெரிய துறையை அடித்து காயத்தை ஏற்படுத்தி பின்னர் மாணிக்க நாடார் தெருவில் உள்ள செந்தூர்பாண்டி என்பவரின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

இதைத்தொடர்ந்து காயம்பட்ட அன்னலட்சுமி ஏரல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சுந்தரராஜன் மகன் ஜெயபாலன் மீது4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏரல் உதவி ஆய்வாளர் பாலு வழக்குப்பதிவு செய்து ஜெயபாலன் தேடி வருகின்றனர். இந்நிலையில் பண்டாரவிளை பகுதியை சார்ந்த பொதுமக்கள் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வரும் திமுக வர்த்தகர் அணி பிரமுகர் சுந்தர்ராஜன் மகன் ஜெயபாலன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி எஸ்பி இடம் புகார் மனு அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here