சாத்தான்குளம் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

0
40
sathankulam

சாத்தான்குளம், செப். 9:

சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சாத்தான்குளம் கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் மற்றும் வட்டார முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் விஜயன் வரவேற்றார். நிகழ்ச்சிகளை துணை முதல்வர் பங்கராஸ் தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் மிக்கேலம்மாள், ஜோனபர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியைகள் சுந்தரி, பார்பராள், அலுவலக பொறுப்பாளர் பாலா, சவேரியாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை சோபா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here