காற்றாலைகளை அகற்ற வலியுறுத்தி காங். கட்சியினர் உண்ணாவிரதம்

0
77
kvp cong

கயத்தாறு அருகே விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கயத்தாறு, ஓட்டப்பிடாரம் வட்டங்களில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் பலமுறை அளித்தார்களாம். மேலும், கயத்தாறு வட்டம், கரிசல்குளம் – அகிலாண்டபுரம் சாலையில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வேண்டும்.

சுற்றுப்புறச்சூழல் திருத்தச் சட்டம் 2020-யைக் கண்டித்தும், அந்தச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில், கரிசல்குளம் – அகிலாண்டபுரம் சாலையில் உள்ள காற்றாலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக திங்கள்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து, கரிசல்குளம் – அகிலாண்டபுரம் சாலையில் உள்ள காற்றாலை அருகே கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. துறை மாநிலத் துணைத் தலைவர் மாரிமுத்து, கட்சியின் கயத்தாறு ஒன்றியத் தலைவர் செல்லத்துரை, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர், மத்திய வட்டாரத் தலைவர் கருப்பசாமி உள்பட 14 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கயத்தாறு போலீஸார் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here