சாத்தான்குளத்தில் மகாகவி பாரதியார் நினைவு தினம்

0
200
sathankulam

சாத்தான்குளம், செப். 11:

சாத்தான்குளம் பாரதி இலக்கிய மன்றம் சார்பில் இங்குள்ள சன்னதி தெருவில் மகாகவி பாரதியாரின் 99வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் நட்சத்திர அரிமா சங்க பொருளாளர் எம். கனகராஜ் தலைமை வகித்தார். பாரதி இலக்கிய மன்ற அமைப்பாளர் ஈஸ்வர்சுப்பையா வரவேற்றார். இதில் பாரதியார் திருஉருவ படத்துக்கு மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் சாமுவேல், ஓய்வுபெற்ற பேருராட்சி செயல் அலுவலர் ராஜதுரை, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஓ.சு. நடராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா, மற்றும் வள்ளி, அங்கப்பன், வள்ளியம்மாள், கமலம், ஆண்டரூஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here