ஸ்ரீவைகுண்டத்தில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் – மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்

0
257
srivaikundam

ஸ்ரீவைகுண்டம், செப்.12:

ஸ்ரீவைகுண்டத்தில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் – மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார். அப்போது, தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும் என்று எஸ்.பி.கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வணிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறையினர், பல்வேறு அரசு துறைகளில் உயர் பதவிகளை வகிப்பவர்கள், விவசாயிகள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆழ்வார்தோப்பு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் ஊர் பொதுமக்களும் இணைந்து தங்களது ஊரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊர் முழுவதும் முக்கிய இடங்களில் முதல் கட்டமாக 30சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

இந்த சிசிடிவி கேமரா துவக்க விழா மாவட்ட திட்ட இயக்குநர் தனபதி தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் சந்திரன், டி.எஸ்.பி., வெங்கடேசன், பி.டி.ஓ., நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

மாவட்டத்தில் முன்னோடியாக இக்கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இளைஞர்கள், ஊர்பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியதாகும். சிசிடிவி கேமராக்கள் குற்றம் நடக்காமல் தவிர்க்கவும் நடைபெற்ற குற்றங்களை விரைவில் கண்டறிவதற்கும் பயன்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக கிராம பகுதியில் சிசிடிவி கேமரா துவக்கி வைக்கப்பட்டுள்ளது இதேபோல் மற்ற கிராம பகுதிகளிலும் நகர் பகுதிகளிலும் விரைவில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்.

ஏரல் அருகே நிகழ்ந்துள்ள பெண் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை பிடித்திட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது என்றார்.

இதில், இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன், டிவிஎஸ் அறக்கட்டளை களப்பணியாளர் சந்திரையா, ஆழ்வார்தோப்பு இளைஞர்கள், ஊர்பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here