சாத்தான்குளத்தில் கடைகளில் திருடிய நெல்லை இளைஞர் கைது

0
12
sathankulam theft news

சாத்தான்குளம், செப். 12:

சாத்தான்குளத்தில் ஒரே நாளில் 3கடைகளில் திருடிய நெல்லை இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் க. அய்யாக்குட்டி (50) எனபவரது ஹோட்டல் கடையிலும், சு.ராஜசேகர்(55) என்பவரது பேன்சி கடையிலும், சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயம் அருகில் பெட்டி கடை நடத்தி வந்த து. ஜெகதீஷ் (36) ஆகியோர் கடையின் பூட்டை உடைத்து கடந்த 10ஆம்தேதி இரவு மர்ம நபர் உள்ளே நுழைந்து பணம் மற்றும் சில்லறை காசுகளை திருடி சென்றார். இதுகுறித்து 3கடை வியாபாரிகளும் சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்ததையடுத்து உதவி ஆய்வாளர் முத்துமாரி வழக்குபதிந்தார். காவல் ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர் விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் முத்துமாரி தலைமையிலான போலீஸார் சாத்தான்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து சென்ற போது பஸ் ஏற காத்திருந்த ஒருவர் போலீஸை கண்டதும் தலைமறைவானார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் நெல்லை சிம்மராஜபுரத்தைச் சேர்ந்த இசக்கி மகன் கார்த்தீசன் (25) என தெரியவந்தது. 3கடைகளிலும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவர் போலீஸார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள கார்த்தீசன் மீது நெல்லை பகுதியில் 8 திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 3கடையின் பூட்டை உடைத்து திருடிய நபரை ஒரே நாளில் பிடித்த போலீஸாருக்கு வியாபாரிகள் , பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here