கந்தசாமிபுரம் ஸ்ரீசெல்வ சக்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

0
121
sathankulam vinayagar

சாத்தான்குளம், செப். 12:

சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம் கந்தசாமிபுரம் அருள்மிகு ஸ்ரீசெல்வசக்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீசெல்வ சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஸ்ரீசெல்வசக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பக்தர்கள் தமிழக அரசின் விதிப்படி சமூக விலகலை கடைபிடித்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கந்தசாமிபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here