மகாகவி பாரதியின் 99 வது நினைவு தினம் : எட்டயபுரத்தில் அனுசரிப்பு

0
30
bharadi

பாரத நாட்டின் விடுதலைக்காக தனது புரட்சி எழுத்துக்கள் மூலம் விடுதலை எழுச்சியூட்டிய எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு செப் 12 ம் தேதி நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி மற்றும் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் எட்டயபுரம் பாரதி இல்லத்தில் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.எட்டயபுரம் பாரதி பிறந்த இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் உள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி பாரதியின் கோஷங்களை எழுப்பி பாடல்களை பாடி மரியாதை செலுத்தப்பட்டது.

நாடார் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பாரதியும் ஆசிரியர் பணியும் என்ற தலைப்பில் கவிதை மற்றும் கட்டுரை தொகுப்பு நூலினை தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர் வெளியிட நாடார் நடுநிலைப் பள்ளி செயலர் கண்ணன் பெற்றுக் கொண்டார்.

கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர் பரிசும் சான்றிதழும் வழங்கினார். நிகழ்ச்சியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் உறுப்பினர் நடராஜன், நாடார் நடுநிலைப் பள்ளி பொருளாளர் அய்யப்பன், தலைமையாசிரியை செல்வி ஆசிரியர்கள் செயச் சந்திரா, ஜெப லதா, கனகலட்சுமி, தனலட்சுமி, மலர்க்கொடி, அமலாதேவி,அருணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here