கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் தாலூகா அலுவலக புதிய கட்டிடம் சமீபகாலத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தாலூகா அலுவலகத்திற்கு வந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி, அலுவலகத்தை பார்வையிட்டார்.


தொடர்ந்து மக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.அப்போது தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகரன்,,தாசில்தார் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் ப்ரியாகுருராஜ், அதிமுக ஒன்றிய செயலாளர் வினோபாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.