ஸ்ரீவைகுண்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

0
46
anna news

ஸ்ரீவைகுண்டம், செப்.15:

ஸ்ரீவைகுண்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் நகர அதிமுக சார்பில் அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். விழாவினை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் மேடைப்பிள்ளையார் கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்திற்கு நகர செயலாளர் காசிராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், மேற்கு ஒன்றிய இணை செயலாளர் சிங்கப்பன், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் துரை, அண்ணா தொழிற்சங்க தொழிற்சங்க தலைவர் திருப்பதி, செயலாளர் எட்வர்டு அந்தோணிராஜ், பொருளார் பார்வதி, எம்.ஜி.ஆர்.பேரவை இணைசெயலாளர் திருமாழ்மார்பன், நிர்வாகிகள் ராமசாமி, பாலகிருஷ்ணன், நகர இணைச்செயலாளர் பாப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here