எந்தனை தடைகள் ஏற்படுத்தினாலும் அத்தனையும் தாண்டி இந்த முறை சட்ட மன்றத்துக்குள் நுழைந்தே ஆக வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழகத்தில் பாஜக பலமாக கால் ஊன்றவேண்டும் என்றும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது தமிழக பாஜக. அதற்காக மாநில தலைவர் முருகன், மாநிலம் முழுவதும் அடிக்கடி சுற்றுப்பயணம் செல்ல தயாராகியிருக்கிறார்.

அதற்கு முன்னோட்டமாக பிரதமர் மோடியின் 70 வது பிறந்த நாளை சிறப்புடன் நடத்த வேண்டும் என தமிழக பாஜக முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் மோடியின் பிறந்தநாள் விழா களைகட்டியிருக்கிறது.
அந்த வகையில் தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாஜக வணிகர் பிரிவு சார்பில் மாவட்ட செயலாளர் K. பழனிவேல் ஏற்பாட்டின் பேரில் 70 அடி உயர கொடி கம்பம் அமைத்து கொடி அதில் பாஜக கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் P.M பால்ராஜ் மற்றும் வர்த்தக அணி மாநில தலைவர் ராஜா கண்ணன் தலைமை வகித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராம மூர்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.

வணிகர் பிரிவு மாவட்டத்தலைவர் s.நாராயணன், மாநில செயலாளர் உமரி S. சத்தியசீலன், மாவட்ட செயலாளர்கள் K. பழனிவேல், மாவட்ட செயலாளர் கனல் K. ஆறுமுகம், மாவட்ட செயலாளர் பாலபொய் சொல்லான் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

காலை தூத்துக்குடி சிவன் கோவிலில் மோடி பெயருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. கூட்டாம்புளியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.