தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

0
103
crime news

கடந்த 21.08.2020 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல முடிமண் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்த மதன்(30) என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் ஓட்டப்பிடாரம் போலீசார் ஓட்டப்பிடாரம் மேல முடிமண் பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் மாரிமுத்து (38) என்பவரை கைது செய்தனர். மாரிமுத்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், மாவட்ட எஸ்.பிக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

thoothukudi collector

அதேபோல் கடந்த 28.08.2020 அன்று புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த சங்கர் மகன் விஜயகுமார் என்ற விஜய்(20) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து, புதியம்புத்தூர் தெற்கு காலனியைச் சேர்ந்த ராஜன்(54) மற்றும் தங்க மாரியப்பன்(36) ஆகியோரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேற்படி விஜயகுமார் என்ற விஜய்(20) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்ரமணியன், மாவட்ட எஸ்.பிக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

thoothukudi s.p

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 2 பேர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாரிமுத்து(37), விஜயகுமார் என்ற விஜய் (20) ஆகிய இரண்டு பேர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் 2 பேர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here