தூத்துக்குடியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் கீதாஜீவன் எம்.எல்.ஏ

0
50
geethajeevan

பெரியாரின் 142 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி சென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் SR ஆனந்தசேரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் P ஜென் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் மாவட்ட,மாநகரகழக நிர்வாகிகள், பகுதி, வட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து சார்பு அணிகளைச் சேர்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here