இன்று புரட்டாசி மகாளய அமாவாசை நாள் – தூத்துக்குடி கடற்கரையை மாவட்ட எஸ்.பி பார்வையிட்டார்

0
119
sp news

புரட்டாசி மாத, மகாளய அமாவாசை நாளான இன்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு சடங்கு சம்பிரதாயம் செய்வதற்காக அதிகம் கூடும் இடமான தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ரோந்து வாகனத்தில் (All Terrain Vehicle) சென்று பார்வையிட்டார்.

ஆண்டுதோறும் புரட்டாசி மகாளய அமாவசை நாளில் ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும் கடற்கரையோரங்களில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும, நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி மகாளய அமாவாசை நாளான இன்று சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும் கடற்கரையோரங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடுமிடங்களில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (17.09.2020) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியை தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்தின் அனைத்து நிலப்பரப்பிலும் செல்லக்கூடிய ரோந்து வாகனத்தில் (All Terrain Vehicle) சென்று பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here