கோவில்பட்டியில் சர்க்கஸ் தொடக்கம்

0
19
WhatsApp Image 2019-07-02 at 5.30.01 PM

கோவில்பட்டியில் நேற்று இரவு சர்க்கஸ் தொடங்கியது.

கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள யானைக் கிணறு மைதானத்தில் பிரம்மாண்ட கலையரங்கில் அப்பல்லோ சர்க்கஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர் ராஜு தலைமை வகித்தார். அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனர் சங்கரலிங்கம் சர்க்கஸை திறந்து வைத்தார்.
சர்க்கஸ் நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். உடலை வில்லாக அமைத்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
கயிற்றில் தொங்கியபடி விளையாடுதல், வலை விளையாட்டு, நெருப்பு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் நடைபெறும். தொடர்ச்சியாக 1.45 மணி நேரம் முழுவதும் பார்வையாளர்களை கவரும் விதமாக இன்னிசையுடன் கூடிய பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை அப்பல்லோ சர்க்கஸ் மேலாளர் சனில் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here