ஸ்ரீவைகுண்டம், செப்.20:
ஸ்ரீவைகுண்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும், தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை உடனே வழங்கவேண்டும், விவசாயத்தை அழிக்கும் அவசர சட்ட திருத்தங்களை கைவிடவேண்டும், தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி இழப்பீட்டை உடனடியாக வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா ஆபீஸ் அருகில் சி.பி.ஐ, சி.பி.எம்., கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மா.கம்யூ செயலாளர் நம்பிராஜன், இ.கம்யூ ஒன்றிய செயலாளர் அம்பிகாவதி ஆகியோர் தலைமை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட சிபிஎம் செயலாளர் அர்ச்சுணன், தூத்துக்குடி மாநகர சிபிஐ செயலாளர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கருங்குளம் ஒன்றிய மா கம்யூ. செயலாளர் ராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணபதி, ராமச்சந்திரன், ராமலிங்கம், சுவாமிதாஸ், சிபிஐ நகர செயலாளர் நடராஜன்,ஆறுமுகம், மா.கம்யூ. நிர்வாகிகள் கண்ணன், மாரியப்பன், மணி, சின்னதுரை மற்றும் அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் சங்கிலிப்பூதத்தான், ஆறுமுகம், உலகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.