கோவில்பட்டி தொழிலதிபரை மிரட்டியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்கு

0
244
naantamilar

கோவில்பட்டி தொழிலதிபரை மிரட்டியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க தலைவராக இருப்பவர் பழனிசெல்வம். இவர் முடுக்கலான்குளம் கிராமத்தில் சரள் குவாரி நடத்திவருகிறார். இவரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி நிதி கேட்டு இராஜேஷ்கண்ணண் என்பவர் சென்றுள்ளார்.

பணம் தர மறுத்த தொழிலதிபரை ஆபாசமாக பேசி இராஜேஷ்கண்ணண் கொலை மிரட்டல் விட்டதாக தெரிகிறது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இராஜேஷ்கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் (294 (b), 506 (ii) மற்றும் 66 IT act) வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இராஜேஷ்கண்னனை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here