டிரைடன்ட் ஆர்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ரவீந்திரன்,ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு :
விஷால், தமன்னா நடித்த ஆக்சன் படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்தது. அதில் நஷ்டம் ஏற்பட்டதால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திரும்பி தருவதாக என்னுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.
இதற்கிடையில் இயக்குனர் ஆனந்தன் எங்கள் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொல்லி அதை சினிமாவாக எடுக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால் அதே கதை அடிப்படையில் வேறு ஒரு நிறுவனம் மூலம் விஷால் நடிப்பில் சக்ரா என்ற படத்தை ஆனந்தன் இயக்கியுள்ளார். விரைவில் ஓடி டி தளத்தில் வெளியாக உள்ள அந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான இந்த இரு விவகாரங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தப்படி எனக்கு வழங்க வேண்டிய ரூபாய் 8.29 கோடியை கோர்ட்டில் செலுத்துமாறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சக்ரா படம் எங்களிடம் ஆனந்தன் ஒப்பந்தம் செய்த கதை என்பதால் அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். உத்தரவாத தொகையாக ஒரு கோடியை கோர்ட்டில் செலுத்த ஆனந்தனுக்கு உத்தரவிட வேண்டும்’’ இவ்வாறு ரவீந்திரன் முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி சதீஷ் குமார் நேற்று விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்ரமணியன்,சக்கர படம் விரைவில் வெளியாக உள்ளதால் விசாரணையை வேகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து 24 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு விஷால் மற்றும் ஆனந்தனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.