”கைதியை தப்ப விட்ட புதியம்புத்தூர் எஸ்.ஐ முத்துராஜ் சஸ்பெண்ட் – மாவட்ட எஸ்.பி அதிரடி”

0
43
thoothukudi sp news

புதியம்புத்தூர் காவல்நிலைய திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரியை தப்ப விட்ட உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருட்டு பைக் சம்மந்தமாக புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த நாகராஜ் மகன் மாயகிருஷ்ணன் என்ற தெய்வகுழந்தை என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய பின்னர் அவரை பேரூரணி சிறையில் அடைக்க சென்று கொண்டிருந்தபோது, மாயகிருஷ்ணன் என்ற தெய்வகுழந்தை போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். தனிபடையினர் தீவிரமாக தேடி அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து மாயகிருஷ்ணன் என்ற தெய்வக்குழந்தை தப்பி ஓடிய போது கைதி வழிக்காவல் பணியில் அசட்டையாக பணிபுரிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் காவலர் சுடலைமுத்து ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here