வீரபாண்டியபட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை

0
21
sivanthi news

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியபட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அன்னாரது 85வது பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (24.09.2020) நடைபெற்றது.

இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட தலா ரூ.18 லட்சம் மதிப்பிலான இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்), ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தார். பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:

’’இந்தியாவின் நம்பர் 1 நாளிதழ் என்று பெருமை பெற்ற குறிப்பாக தமிழில் முதன்முதலில் தொடங்கப்பட்ட தினத்தந்தி நாளிதழை தந்தை வழியில் தனயன் என்ற வகையில் முன்னாள் அமைச்சரும், சட்டபேரவை தலைவருமான அய்யா ஆதித்தனார் வழியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 1959ஆம் ஆண்டில் தினத்தந்தி நாளிதழின் நிர்வாக பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு பத்திரிக்கை உலகில் ஜாம்பவான், ஆன்மீகச்செம்மல், கொடை வள்ளல், கல்வி தந்தை, இந்திய கைப்பந்தாட்ட கழக தலைவர், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்து சிறப்புகளை பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் 1982-1983ஆம் ஆண்டு சென்னை மாநகர செரீப் ஆக உயரிய பட்டம் மற்றும் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பன்முக சிறப்புகளை பெற்ற டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் புகழை நிலைநாட்டும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்தார்கள். புரட்சித்தலைவி அம்மா இந்திய திருநாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தன்னிகரில்லா தலைவர்களையும், தமிழ்ச்சான்றோர்களையும் பெருமைப்படுத்தும் வகையில் போற்றி புகழ்ந்து தலைவர்களுக்கு மணிமண்டபம், சிலை அமைத்தல் மற்றும் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது போன்ற பல்வேறு சிறப்புகளை செய்து வந்தார்கள்.

புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் குறிப்பாக தென் மாவட்ட மக்களின் கோரிக்கையினை ஏற்று 22.11.2017 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மக்களின் கோரிக்கை மற்றும் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற மகத்தான அறிவிப்பினை வெளியிட்டார்கள். அந்த அறிவிப்பை தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலமாக திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மணிமண்டபம் ரூ.1.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் 22.02.2020 அன்று திருச்செந்தூருக்கு நேரில் வந்து திறந்து வைக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் கோரிக்கை வைக்காமலேயே, அய்யா ஆதித்தனார் அவர்கள் மற்றும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்கள். அதனடிப்படையில் இன்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 85வது பிறந்த நாள் விழா முதன்முதலாக அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனா அவர்களின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரால் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம், இடைசெவல் துணை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தலா ரூ.18 லட்சம் மதிப்பிலான இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பணிகள் இன்று துவங்கி வைக்கப்பட்டது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, வட்டாட்சியர் ஞானராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தோஷ், ராமராஜ், தினத்தந்தி குழும பொது மேலாளர் பொன்ராஜகுரு, ஆதித்தனார் கல்வி நிறுவன திருச்செந்தூர் மேலாளர் வெங்கட்ராமன்,

ஒன்றியக்குழு தலைவர்கள் செல்வி வடமலைப்பாண்டியன் (திருச்செந்தூர்), கஸ்தூரி சுப்புராஜ் (கோவில்பட்டி) ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரெஜிபர் பர்னாந்து, நகர வங்கி தலைவர் கோட்டைமணிகண்டன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுனில், மாவட்ட மேலாளர் ரஞ்சித் விஸ்வநாதன், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், ராமச்சந்திரன், லட்சுமணன், சுரேஷ்பாபு, மோகன், இன்பசந்திரன் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here