மூக்குப்பேறி ஊராட்சியில் காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்!

0
20
nazareth news

நாசரேத்,செப்.26:மூக்குப்பேறி ஊராட்சி யில் காவல்துறை- பொதுமக்கள் நல் லுறவு கூட்டம்ஊராட்சி தலைவர் கமலா கலைஅரசு தலைமையிலும், துணைத் தலைவர் தனசிங் முன்னிலையிலும் நடைபெற்றது.

மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதிஸ்குமார், நாசரேத் காவல்துறை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் ஊராட்சி பொதுமக்களிடம் கலந்துரையாடினார்கள்.ஊராட்சியில் CCTV கேமரா வைப்பது பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் விளக்கமாக பேசினார்கள்.காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரீட்டா, பிச்சை கனி, கிரேஸ், பாலசுந்தர், அந்தோனி கிறிஸ்டி, கலை அரசு, ஆறுமுகம் மற்றும் மூக்குப்பேரி கூட்டுறவு வங்கி துணை மேலாளர்கள் சுரேஷ், ஜெபபால், அகில பாரத இந்துமகாசபா மாவட்ட செயலாளர் ராம்குமார்,காமராஜ் ஆதித்தனார் கழக ஒன்றிய செயலாளர் டேனி ஜெபசிங், ச.ம.க. ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ், இந்து முன்னனி ஒன்றிய நிர்வாகி முருகன், தி.மு.க ஒய்யான்குடி கிளைகழக செயலாளர் மோசஸ் கிருபைராஜ், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் காமராஜ், காந்திநகர் தி.மு.க. கிளைகழக செயலாளர் முத்துவேல், தி.மு.க. கிளைகழக .செயலாளர் டென்சிஸ்,தி.மு.க. ஆழ்வை ஒன்றிய பிரதிநிதி மணிமாறன்,

காங்கிரஸ் தலைவர் சிலுவைராஜ்,அ.ம.மு.க. ஊராட்சி செயலாளர் சூடாமணி, தூய. மாற்கு ஆலய பரிபாலணை கமிட்டி பொருளாளர் ஜெயச்சந்திரன்,மகளிர் குழு தலைவி பானுமதி, தொழில் அதிபர்கள் ஜஸ்டஸ் ரதிஷ், பாபு, ஏக இரட்சகர் சபை முன்னாள் தலைவர் மதுரம், மேஷாக் கோயில்ராஜ், சவான், நயினார், ஒய்யான்குடி ராஜன் மற்றும் மகளிர் குழு நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் வேதமாணிக்கம் செய்து இருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here