ஸ்ரீவைகுண்டம் சிஎஸ்ஐ ஆலயத்தில் கொள்ளை

0
55
srivaikundam

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டத்தில் சுமார் 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிஎஸ்ஐ தூய இம்மானுவேல் ஆலயம் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக ஆலயம் திறக்கப்படாத காரணத்தால் இந்த ஆண்டு கோயில் உண்டியல் இதுவரை திறக்கப்படவில்லை. இதில் சுமார் 50ஆயிரம் ரூபாய் மற்றும் அரை பவுன் கம்மல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலையில் கோயில் பணியாளர் ஆலயத்தை சுத்தம் படுத்தும் பணிக்காக வந்தபோது ஆலய வாசலிலுள்ள பூட்டும் வாசலில் பொருத்தப்பட்டுள்ள ஒரு உண்டியல் மற்றும் ஆலயத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆலய குருவானவர் வேதமாணிக்கம் புகார் அளித்தார். இதன்பேரில், ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here