நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் சகோ.மோகன் சி. லாசரஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் – டிச.14 முதல் துவங்கி டிச.25 வரை நடைபெறுகிறது

0
502
mohan c lazrus

நாசரேத்,டிச.07:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் நாலுமாவடி யில் சகோ. மோகன் சி.லாசரஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங் கள் வருகிற 14 ஆம் தேதி முதல் துவங்கி டிச.25 ஆம் தேதி வரை நடைபெறுகி றது.

தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நலத்திட்ட உதவிகள்,அறுசுவை கிறிஸ்துமஸ் விருந்துகள்,சிறப்பு பிரார்த்தனைகள்,கிறிஸ்துமஸ் தினத்தன்று நாலுமாவடியைச்சுற்றி யுள்ள கிராம மக்களுக்கு காலையில் கிறிஸ்துமஸ் சிறப்புவிருந்து வழங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

விழா துவக்கமாக டிச.14 ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை 6 மணியளவில் நாலுமாவடி புதுவாழ்வு குழந்தைகள்காப்பகத்தில் கிறிஸ்துமஸ் மரவிழா நடைபெறுகி றது.நாலுமாவடி புதுவாழ்வு குழந்தைகள்காப்பகத்தில் பயிலும் மாணவிகளில் பள்ளி யில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் இருவருக்கு ஸ்கூட்டியும்,இங்கு பயி லும் 250குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளும் வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச் சியில் சகோதரி ஜாய்ஸ் லாசரஸ்,நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அன்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

டிச.19 ஆம்தேதி வியாழக்;கிழமையன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நாலுமாவடி தேவனுடைய கூடாரம் வளாகத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு அற்புத விடுதலைப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் சிறப்பு செய்தி கொடுத்து வியாதியஸ்தர்களுக்காக சிறப்பு பிரார்த்தனையை ஏறெடுக்கிறார்.

மேலும் சாத்தான்குளம் அருகிலுள்ள பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனை தொழுநோயாளிகள்,வியாதியஸ்தர்கள் 750 பேர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியக் குழுவினர் புத்தாடைகள் வழங்கி விருந்து வழங்கு கின்றனர்.

டிச.23 ஆம்தேதி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள்,விதவைகள்,திருநங்கைகள் ஏழை,எளியமக்கள் 9 ஆயிரம் பேர்களுக்கு சகோ. மோகன் சி. லாசரஸ் கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கி சிறப்பு செய்தி கொடுத்து பிரார்த்தனைசெய்கிறார்.இதில் சின்னத்திரைநடிகர் ஸ்ரீகுமார் சிறப்பு சாட்சி கொடுக்கிறார்.

டிச.24 ஆம்தேதி செவ்வாய்கிழமை நாலுமாவடி புதுவாழ்வு சபையில் மாலையில் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடைபெறு கிறது.டோனாவு+ரைச் சேர்ந்த ஏ.ஜி.சுந்தர்சிங் குழுவினரின் பஜனைப் பிரசங்கம் நடை பெறுகிறது.நாலுமாவடி சேகரபோதகர் கிராக்ஸிராஜ்குமார் ஜெபித்து துவக்கி வைக்கிறார்.

டிச.25 ஆம்தேதி புதன்கிழமை காலை 8 மணியளவில் நாலுமாவடி சுற்றுவட்டார பகுதியிலுள்ளமக்கள் சுமார் 2ஆயிரம் பேர்களுக்கு கிறிஸ்துமஸ் அறுசுவை விருந்து வழங்குவதை சகோ.மோகன் சி.லாசரஸ்,சகோதரி ஜாய்ஸ்லாசரஸ் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவிற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியநிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில்,பொதுமேலாளர் செல்வக்கு மார் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here