தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வந்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட் மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி கலந்த ஆனந்தமடைந்தனர்.
சாயர்புரம், நடுவைகுறிச்சி,சிவத்தையாபுரம், சுப்பிரமணியபுரம்,முள்ளன்விளை,சேர்வைகாரன்மடம், கூட்டாம்புளி பகுதிகளில் சற்று முன் கடும் காற்றுடன் மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கியது. சாயர்புரம் பகுதியில் பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. அதுபோல் சுற்றுவட்டாரபகுதியில் மின்சாரம் தடைபட்டது. சாயர்புரம் பேரூராட்சி ஊழியர்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வீட்டின் கூரையின் மீதும், நடந்து செல்வோர் மீதும், ஆலங்கட்டி மழை விழுந்தது அப்பகுதியினருக்கு புதுமையாக இருந்தது. ஆலங்கட்டிகளை சிறுவர், சிறுமியர் பாத்திரங்களில் பிடித்து வைத்து விளையாடினர்.