பழனியப்பபுரத்தில் ரூ44 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் – எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

0
96
shanmuganathan news

சாத்தான்குளம், செப்.27:

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் சட்டபேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ44 லட்சத்தில் சமுதாய நலக்கூடம், உணவுக் கூடம் அமைக்கும் பணியை எஸ்பி. சண்முகநாதன் எம்எல்ஏ, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஆழ்வார்திருநகரி ஒன்றியம் கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட பழனியப்பபுரத்த்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 44 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயநலக்கூடம் மற்றும் உணவகம் கட்டடம் கட்டப்பட உள்ளது. இக்கட்டட பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி கட்டடபணியை தொடங்கி வைத்தார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆணையர் பாக்கியலீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, ஒன்றிய பொறியாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருப்பாற்கடல்,ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலர் செம்பூர்ராஜ்நாராயணன், கிழக்கு ஒன்றிய செயலர் விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலர் காசிராஜன், தென்திருப்பேரை நகர செயலர் ஆறுமுகநயினார், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலர் லட்சுமணன்,,மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் முத்தையா ,

மேற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர் ரவிந்திரபிரபு , மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி துணை செயலர் கணேசமூர்த்தி, ஆழ்வார்திருநகரி ஒன்றியக்குழு உறுப்பினர் காந்திமதி, கருங்கடல் ஊராட்சி மன்ற தலைவர் நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here