புதிய விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு – குரும்பூரில் அனிதாராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

0
30
dmk anitha

நாசரேத், செப். 29- புதிய விவசாய மசோதாக்களை எதிர்த்து குரும்பூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதிய விவசாய மசோதாக்களை எதிர்த்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் குரும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன்குமார் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு மற்றும் மத்திய அரசுக்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்தும், விவசாய சட்டமசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், அவைத்தலைவர் அருணாச்சலம், ஆழ்வை கிழக்கு ஒன்றிய பொருளாளர் பாதாளமுத்து, ஆழ்வை ஒன்றிய சேர்மன் ஜனகர், மேலாத்தூர் பஞ்., தலைவர் சதீஷ்குமார், விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமையா,

மாவட்ட காங்., தலைவர் ஸ்ரீராம், நாசரேத் நகர காங்., தலைவர் ரவிராஜா, இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் கரும்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், தென் மண்டல அமைப்பு செயலாளர் தமிழினியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீனிவாசன், சமத்துவ மக்கள் கழக ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜா, புன்னக்காயல் பஞ்., தலைவர் சோபியா, குரங்கணி பஞ்., தலைவர் முருகன், நல்லூர் பஞ்., தலைவர் பரிசமுத்து, குரும்பூர் திமுக நகர செயலாளர் பாலம் ராஜன், சேதுக்குவாய்த்தான் ஊராட்சி செயலாளர் நட்டார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here