நாசரேத் அருகே தைலாபுரம் பரிசுத்தஉபகாரஅன்னைஆலய திருவிழா – 10 நாட்கள் நடந்தது

0
17
nazareth news

நாசரேத் செப் 28

நாசரேத் அருகில் உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலயதிருவிழா கடந்த 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 6மணிக்கு ஜெபமாலைநவநாள் திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.

9-ம் திருவிழா மாலை6மணிக்கு ஜெபமாலை மறையுரை, நற்கருணை பவனி திருவிழாமாலை ஆராதனை நடந்தது. தூத்துக்குடி முதன்மைசெயலர் நார்பட் தாமஸ் தலைமைவகித்தார். பிரகாசபுரம் பங்குதந்தைஅந்தோணி இருதயதோமாஸ் முன்னிலை வகித்தார். இதில் திரளானமக்கள் கலந்து கொண்டனர்.

10ம் திருவிழாகாலை 6மணிக்கு ஜெபமாலை, திருவிழா ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடந்தது.வள்ளியூர் வட்டம் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் தலைமை வகித்தார். வள்ளியூர் வட்டம் குடும்பநலவாழ்வுபணிக்குழுசெயலர் மரிய அரசு மறையுரை ஆற்றினார். மதியம் 12 மணி அளவில் சப்பரபவனி நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை 7 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர் கொடியிறக்கநிகழ்வு நடந்தது.

ஏற்பாடுகளைதைலாபுரம் பரிசுத்த உபகார அன்னைஆலய பங்குத்தந்தைஇருதயராஜா தலைமையில் விழாக்குழுவினர், இறைமக்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here