நாசரேத் அருகே இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்

0
16
nazareth

நாசரேத் செப்:28

நாசரேத் அருகில் உள்ளபுன்னைநகர் சீனிவாசகலையரங்கில் தூத்துக்குடிதெற்குமாவட்டஇந்துமுன்னணிபொதுக் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமைவகித்தார். கூட்டத்தில் மாநிலபொதுச் செயலாளர் அரசுராஜா, மாநிலதுணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், கோட்டசெயலாளர், சக்திவேலன் உள்படபலர் பேசினர்.

கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்செந்தூர் அருள்மிகுசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுடன் இனைந்த தூண்டிகைவினாயகர் திருக்கோவில் தமிழக அரசின் இந்துஅறநிலையதுறையின் கீழ் செயல்பட்டுவருகிறது இத்திருக்கோயில் மிகவும் சித்தியடைந்தநிலையில் உள்ளது.

எனவே இந்ததிருக்கோவில் நிர்வாகம் தூண்டிகைவினாயகர் திருக்கோவிலைசுத்தம் செய்துகும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும்,குலசேகரபட்டினம் அருள்மிகுமுத்தாரம்மன் திருக்கோயில் நடைபெறும் தசராதிருவிழாவின் போதுபக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லைஎன்றுகோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது தசராதிருவிழாவின் போது கடுமையாகவிரதம் இருந்துதிருக்கோவிலுக்குவரும் காளிபக்தர்களுக்கும் திருக்கோயில் கட்டளைதாரர்கள் 5 பேர்கள் அமர்ந்து சாமிதரிசனம் செய்யதிருக்கோயில் நிர்வாகம் அனுமதிதரவேண்டும் என்றும்,

திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பாதாளசாக்கடைதிட்டத்திற்கான சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இருந்துபெரும் தொகை செலவிடபட்டுள்ளது மீண்டும் கோயில் நிர்வாகத்தில் இருந்து செலவழித்து இத்திட்டத்தை முடிக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டன. இதில் கோட்ட இனையதளபொறுப்பாளர் சங்கர் மாவட்டதுணைத் தலைவர் கசமுத்து, மாவட்டசெயலாளர்கள்அன்புசுந்தர பிரபாகரன்,சுடலைமுத்துமாவட்டநிர்வாக குழு உறுப்பினர்கள் வெட்டும்பெருமாள், சின்னத்துரை உள்படபலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here