அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை பெருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கியது !

0
15
thiruchendur

திருச்செந்தூர், செப். 29

திருச்செந்தூர் அருகே பிரசித்தி பெற்ற அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை பெருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கியது. இத்திருவிழா அக். 7ம் தேதி நடக்கிறது.

திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் அக். 7ம் தேதி அதிசய ஆரோக்கிய அன்னை பெருவிழா நடக்கிறது. இந்தாண்டு அதிசய ஆரோக்கிய அன்னை பெருந்திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு செபமாலை பவனி, நவநாள் திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு செபமாலை பவனி நடந்தது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிபட்டம் பவனி நடந்தது. தொடர்ந்து ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு தூத்துக்குடி ஆயர் இல்லம் முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் ஆலயத்தின் எதிர்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. அப்போது வாணவேடிக்கை நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆலய பங்குதந்தை பீட்டர்பால் மற்றும் நிதிக்குழு, இறைமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் தினமும் காலை 5 மணி செபமாலை பவனி, நவநாள் திருப்பலி, மாலையில் செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் திருவிழாவை முன்னிட்டு 6ம் தேதி மாலை திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து அக். 7ம் தேதி அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா நடக்கிறது.

அன்றையதினம் காலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பங்குதந்தை விழாகப்பன் தலைமையில் திருவிழா கூட்டு திருப்பலி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய பங்குதந்தை பீட்டர்பால், தற்கால நிதிக்குழுவினர் மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here