மராட்டிய மாநிலத்தில் அணை உடைந்தது: 6 பேர் பலி, 18 பேர் மாயம்

0
17
201907030952230949_6-killed-18-missing-after-Tiware-dam-breaches-in_SECVPF.gif

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தாமதமாக தொடங்கிய பருவமழை நகரை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல்கொட்டி தீர்த்து வருகிறது. நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
இந்நிலையில், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்தது. இதனால், அருகில் உள்ள கிராமங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. 12 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இரண்டு பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெள்ள நீரில் 18 பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here