முத்தையாபுரம் அருகே நடத்தையில் சந்தேகம் – 3 வது மனைவி அடித்துக் கொலை

0
10
murder

முத்தையாபுரம் அருகே உள்ள தவசி பெருமாள் சாலை வவுசி நகரில் நடத்தை சந்தேகத்தால் பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

முத்தையாபுரம் அருகே உள்ள தவசிபெருமாள் சாலை வவுசி நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி (40). பெயிண்டராக உள்ளார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சண்முக லட்சுமி (44) என்ற பெண்ணை 3வது திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் 2 மனைவிகள் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் பிரிந்துவிட்டனர்.

முத்தையாபுரம் பகுதியில் குடியிருந்து வந்த இவர்கள் கடந்த திங்கட்கிழமை தவசி பெருமாள் சாலை வவுசி நகரில் நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் குடியிருப்பதற்கு வாடகை முன்பணம் கொடுத்து சென்றனர். நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு வீட்டிற்கு பால் காய்ச்சி குடி போனார்கள். பின்னர் கருப்பசாமி 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறினார்.

நேற்று மதியம் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டின் பின்பக்க கதவு வழியாக ரத்தம் கசிவதை பார்த்து முத்தையாபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் பூட்டை திறந்து சோதனை செய்ததில் சண்முக லட்சுமி பால் காய்ச்ச பயன்படுத்தும் கல்லால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தடயவியல் நிபுணர் கலா வரவழைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொண்டார்.

மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு சோதனை செய்தனர் சிறிது தூரம் சென்ற நாய் பின்னர் திரும்பிவிட்டது. கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஏஎஸ்பி ட்ரெயினிங் அபிஷேக் குப்தா, டிஎஸ்பி கணேஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சண்முக லட்சுமி யின் கழுத்தை அறுத்ததில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 11 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியல் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கணவர் கொலை செய்துள்ளார். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு குற்றவாளியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தவசிப்பெருமாள் சாலை தெருவில் உள்ள வீட்டில் நேற்று காலை (29.09.2020) கருப்பசாமி (45) என்பவர் தனது மனைவி சண்முகலெட்சுமி (40) என்பவருடன் வாடகைக்கு குடியேறியுள்ளார்.

இந்நிலையில் கருப்பசாமி மனைவி சண்முகலெட்சுமி இன்று பூட்டிய வீட்டிற்குள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் கருப்பசாமி நேற்றே கொலை செய்துவிட்டு கதவை பூட்டிவிட்டு சென்றிருப்பதாக தெரிகிறது. இது குறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அவருடன் பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அவர்களும் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here