தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய பகுதியை கண்காணிக்க 16 சிசிடிவி கேமரா

0
11
sp news

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்துவரும் குற்ற சம்பவங்களை குறைக்கும் நோக்கமாக மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் கஞ்சா, கடத்தல், திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதிலும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மேலும் ஒருபடியாக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் குற்ற சம்பவங்களில் பின்னணிகளை ஆராயும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஆழ்வார் திருநகர், திருச்செந்தூர் உள்பட பல்வேறு இடங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை சுற்றி முக்கிய இடங்களில் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் கண்காணிப்பு மையம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் இன்று செயல்பாட்டுக்கு வந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு கண்காணிப்பு மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

காவல்துறையின் மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5,500 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மெயின் ரோட்டை தவிர குடியிருப்பு பகுதிகளில் பொருத்த முன்னுரிமை அடிப்படையில் பணி செய்து வருகிறோம். ஒவ்வொரு பகுதியின் தேவையை கருத்தில் கொண்டு கேமராக்கள் அமைக்கப்படுகிறது. அடுத்தக் கட்டமாக திருவைகுண்டம், முறப்பநாடு, செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றசம்பவம் அதிகம் நடைபெறும் இடங்கள், குற்றம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு கேமரா பொருத்தும்பணியை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here