அனைத்து பேருந்துகளையும் இயக்க கோரி ஸ்ரீவைகுண்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
12
srivaikundam tnstc

ஸ்ரீவைகுண்டம், செப் 30:

அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க கோரி ஸ்ரீவைகுண்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாத்திடவும், அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்கிடவும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை தாமதமின்றி வழங்கிடவும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்கிட வலியுறுத்தியும், குறைவான பேருந்துகள் இயக்குவதை காரணம்காட்டி போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் விடுப்பு பிடித்தம் செய்வதை கண்டித்தும் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்படி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட சிஐடியு துணைத்தலைவர் குமரகுருபரன், ஐ.என்.டி.யு.சி.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சம்மேளன குழு உறுப்பினர் சங்கிலிப்பூதத்தான் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், சிஐடியு முனீஸ்வரன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here