திருச்செந்தூர் அருகே தனிப்பிரிவு காவலர் தற்கொலை

0
12
crime

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் தற்கொலைசெய்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை. திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலராக செல்வமுருகன் கடந்த 14.07.2020 முதல் பணியாற்றி வந்தார்.

இவர் 01.05.1976 அன்று பிறந்தவர், இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. இவரது தந்தை பெயர் கணபதி, இவருக்கு அருணா (42) என்ற மனைவியும், கமலேஷ் (18) மற்றும் அகிலேஷ் வர்ஷன் (8) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த 24.05.1999 அன்று இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த இவர் தற்போது பதவி உயர்வுகள் பெற்று தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டார்மடம், தருவைக்குளம், ஆறுமுகநரி, திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றி, சிறப்பாக பணியாற்றியமைக்காக உயர் அதிகாரிகளிடம் பல வெகுமதிகள் பெற்று பாராட்டப்பட்டவர்.

இந்நிலையில் இவர் இன்று (01.10.2020) காலை உடன்குடி கூலையன்குன்று பகுதியில் பனங்காட்டில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here