குரும்பூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

0
129
theft news

நாசரேத், அக். 4- குரும்பூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குரும்பூர் அருகே உள்ள வீரமாணிக்கம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மனைவி பேச்சியம்மாள்(54). இவர் விவசாயம் செய்து வருகிறார். கல்யாணசுந்தரம் கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்தார். குழந்தைகள் இல்லாததால் பேச்சியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 10ம் தேதி பேச்சியம்மாள் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள தனது அண்ணன் ரத்தினசாமி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சம்பவத்தன்று பேச்சியம்மாள் வீடு திரும்பினார். அப்போது முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து பெட்ரூம் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 6 பவுன் தங்க இரட்டை செயின், 2 பவுன் தங்க வளையல், ஒரு பவுன் கல் வைத்த தங்க கம்மல், 3 பவுன் தங்கமாலை செயின் என மொத்தம் 12 பவுன் நகை திருட்டுப்போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து பேச்சியம்மாள் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் எஸ்ஐ தாமஸ் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here