மத்தியரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டத்தால் விவசாயம் அழிந்து போகும் என்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று சொல்லி போராடி வருகிறது. இதற்கிடையே கள் இயக்க தலைவர் நல்லசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போதுதான் அப்படியொரு கருத்தை தெரிவித்தார்.
மேலும் அவர், ‘’மத்தியரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் மசோதா, எதிர்கட்சிகள் சொல்வதுபோல் பெரிய புரட்சியை ஏற்படுத்திவிடபோவதில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க போவதில்லை. அதேபோல் எதிர்கட்சிகள் சொல்வதுபோல் இது விவசாயத்தில் பேரழிவை ஏற்படுத்தப்போவதில்லை.இச்சட்டம் பத்தோடு பதினொன்று..அத்தோடு இது ஒன்று அவ்வளவுதான். விவசாயிகளை குழப்பும் செயலாகத்தான் இதையெல்லாம் நாங்கள் பார்க்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே, நெல் வீணாகிக் கொண்டிருக்கிறன. அரசாங்கம் உடனடியாக கூடுதல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அந்த கொள்முதலில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் லஞ்சம் கொடுக்காமல் எந்த விவசாயின் நெல்லையும் கொள்முதல்நிலையங்கள் எடுப்பதில்லை. இங்கே ஊழல்,லஞ்சம், முறைகேடுகள் களையப்பட வேண்டும்’’ என்றார் நல்லசாமி.