மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : பூச்சிக்காடு – செட்டியார்பண்ணை அணிக்கு முதல் பரிசு

0
194
sathankulam

சாத்தான்குளம், அக். 6:

சாத்தான்குளம் அருகே நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் பூச்சிக்காடு &செட்டியார்பண்ணை அணிக்கு முதல்பரிசு கிடைத்தது.

சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளையில் ஆரசூர் ஊராட்சி மற்றும் திமுக இளைஞரணி சார்பில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் 3நாள்கள் நடைபெற்றது. போட்டியில் கன்னியாகுமரி, செட்டிக்குளம், குண்டல், வள்ளியூர், பூச்சிக்காடு&செட்டியார்பண்ணை, திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, வெள்ளாளன்விளை, கொட்டங்காடு குலசேகரன்பட்டினம், படுக்கப்பத்து உள்ளிட்ட 32 அணிகள் கலந்து கொண்டன்.

முதல் நாள் போட்டியை அரசூர் ஊராட்சித் தலைவர் தினேஷ் ராஜசிங் தலைமையில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் இந்தரகாசி முன்னிலையில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இறுதிபோட்டியில் பூச்சிக்காடு- செட்டியார்பண்ணை அணியை எதிர்த்து கோல்டன் ஈகிள் கிரிக்கெட் கிளம் அணியினர் மோதின. இதில் பூச்சிக்காடு செட்டியார் பண்ணை அணி வெற்றி பெற்று முதல் பரிசான ரூ20 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை பெற்றது.

2ஆம் பரிசான 15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை கோல்டன் ஈகிள் கிரிக்கெட் கிளப் அணிக்கும், 3ஆம் பரிசான ரூ 10 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை குண்டல் ஆர்கேஎஸ் அணிக்கு கிடைத்தது. 4ஆம் பரிசான ரூ5ஆயிரம் கன்னியாகுமரி ஏஜிஐ அணிக்கும், 5ஆம் பரிசான ரூ3000 திசையன்விளை மணலிவிளை அணிக்கும் கிடைத்தது. போட்டியில் சிறந்த ஆட்டக்காரராக குண்டல் அணியைச் சேர்ந்த ஜெனில் தேர்வு பெற்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஊராட்சித் தலைவர் தினேஷ்ராஜசிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் வழங்கினர். இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, அரசூர் ஊராட்சி திமுக செயலாளர் ராஜபாண்டி, துணை செயலாளர் துரைராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் தினேஷ் ராஜசிங் தலைமையில் சிவக்குமார், பிரபுராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here