தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 20 பேர் பணியிட மாற்றம்

0
430
thoothukudi collector

தூத்துக்குடி, அக். 8: தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 20 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள 20 பேர் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் இரா. அரவிந்தன் அதே அலுவலகத்தில் கிராம ஊராட்சி பிரிவு அலுவலராகவும், அந்த பணியில் இருந்த கி. ராணி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் கிராம ஊராட்சி பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் பி. ராமராஜ் அதே அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அந்த பணியிடத்தில் இருந்த சந்தோசம் ஆழ்வார்திருநகரி கிராம ஊராட்சி பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆழ்வார்திருநகரி கிராம ஊராட்சி பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி திருச்செந்தூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியம் லீலா கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கிருந்த வெங்கடாச்சலம் ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கிருந்த வே. பாண்டியராஜன் அதே அலுவலகத்தில் கிராம ஊராட்சி பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் கிராம ஊராட்சி பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, கருங்குளம் அலுவலகத்துக்கும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுசேமிப்பு பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுசேமிப்பு பிரிவு கண்காணிப்பாளராக இருந்த ஹைகோர்ட் ராஜா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கிருந்த வசந்தா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகள் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த பொற்செழியன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவுக்கும், அந்த பணியிடத்தில் இருந்த பானு கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த சசிகுமார் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த நவநீதகிருஷ்ணன் அதே அலுவலகத்தில் கிராம ஊராட்சி பிரிவுக்கும், அந்த பணியிடத்தில் இருந்த சிவபாலன் புதூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here