’’இன்னும் எட்டு நாளில் மழை பெய்யும்’’ – அருள்வாக்கு சொன்னார் இருவப்பபுரம் காடோடி சாஸ்தா !

0
87
sastha kovil news

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே சிவத்தையாபுரம், இருவப்பபுரத்தில் இருக்கிறது காடோடி சாஸ்தா கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கொடை விழா நடந்து வருகிறது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் கடவுள் காடோடி சாஸ்தா , விவசாயிகளால் மழைக் கடவுள் என்றழைக்கபடுகிறது. மழை எப்போது பெய்யும் என்பதை சுவாமியின் அருள் வந்து ஆடுவோர் அருள் வாக்காக சொல்வது வழக்கம்.

எனவே பருவமழை தவறாது பெய்ய வேண்டும் என்று வேண்டி விவசாயிகள் வழிபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள், விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் புரட்டாசி மாதம் கோவில் கொடை விழா நடத்தப்பட்டு வருகிறது.

இதன் படி இந்த ஆண்டும் மழை வேண்டி காடோடி சாஸ்தா கோவில் கொடை விழா நடத்தப்பட்டது. விழாவில் காடோடி சாஸ்தாவிற்கு மதியம் மற்றும் இரவு வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் நடு இரவு 12மணிக்கு காடோடி சாஸ்தா வேட்டை புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ‘இன்னும் எட்டு நாளில் மழை பெய்யும்’ என்று சாமி ஆடியவர் அருள்வாக்கு வழங்கினார். பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வணங்கி ஏற்றனர்.

இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்த்தினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here