தூத்துக்குடி மாவட்டத்தில் சலூன் கடைகள் அடைப்பு

0
66
crim

திண்டுக்கல் மாவட்டம் குரும்பம்பட்டியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி வெங்கடாஜலம் – என்பவரது மகளான 12வயது சிறுமியை கடந்த 16.4.2019அன்று பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார்.

இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தநிலையில், கடந்த மாதம் 29ம் தேதி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வாலிபர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு தகுந்த தண்டணை கிடைத்திட அரசு தரப்பில் மேல்முறையீடு செய்திட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

இதன்படி, தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் என சுமார் 1200க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாநகர தலைவர் கோயில்மணி தலைமை வகித்தார். இதில், மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here