ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி

0
40
aavin news

திருச்செந்தூர் அருகே ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டணம் வேளாங்கன்னி நகரைச் சேர்ந்தவர் கிரேஸ்மேன் மனைவி பிராக்ஸிமா(51). இவரது மகன் பாஸ்டின் (25) என்பவருக்கு நெல்லை ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி வீரபாண்டியன்பட்டணம் ஜேஜே நகரைச் சேர்ந்த சங்கீதா (35), தமிழ்மாறன், தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த கர்ணன் (40) ஆகிய 3பேரிடம் ரூ.3லட்சம் கொடுததாராம்.

ஆனால் அவர்கள் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து பிராக்ஸிமா திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சங்கீதா உட்பட 3பேர் மீதும் சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here