ரஜினி சொத்துவரியை செலுத்தினார் – இதை முதலிலேயே செய்திருக்கலாம்

0
155
rajini

நடிகர் ரஜினிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா என்கிற பெயரில் திருமண மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்துக்கு 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறுமாத காலம் சொத்து வரி ரூ.6.50 லட்சம் பாக்கி இருந்திருக்கிறது.

அத்தொகையை செப்டம்பர் 15ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும். அப்படி செலுத்த தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சொல்லி மாநகராட்சி நிர்வாகம் கடந்த 10ம் தேதி நோட்டீஸ் கொடுத்தது. அதற்கு ரஜினி சார்பில் மாநகராட்சிக்கு அனுப்பிய பதில் மனுவில், ’ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு சொத்து வரியை தவறாமல் செலுத்தி வருகிறேன்.

கொரோனா ஊரடங்கால் இந்த திருமண மண்டபம் இயங்கவில்லை. திருமண முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு முன்பணம் முழுவதும் சம்மந்தபட்டவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபம் 30 நாட்களுக்கு மேல் இயங்காமல் இருந்தால் வரி நிவாரணம் கோரலாம் என்று விதிமுறை உள்ளது. அதன் அடிப்படையில், ராகவேந்திரா திருமன மண்டபத்துக்கான சொத்து வரியைக் குறைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு பதில் வராதபட்சத்தில் ரஜினி சார்பில் ஐகோர்ட்டில் செப்டம்பர் 29ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. தனது மனுமீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிடக் கேட்டிருந்தார். இந்த ம்னு நீதிபதி அனிதா சுமந்த் முன் நேற்று காலையில் விசாரணைக்குவந்தது. ‘மாநகராட்சிக்கு செப்.23ல் மனு அளித்துவிட்டு, செப்.29ம் தேதியே எப்படி வழக்கு தொடரலாம்? மாநகராட்சி முடிவெடுக்க கால அவகாசம் வழங்க வேண்டாமா? மாநகராட்சி பதிலளிக்காவிட்டால் நினைவூட்டல் கடிதம் அனுப்புங்கள். வரிகுறைப்பு குறித்து மாநகராட்சியை நாடலாமே? கோர்ட் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்வேன் என்று நீதிபதி அனிதா சுமந்த் எச்சரித்தார்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பு வக்கீல் கூறினார். அதற்கான மனுவை, இமெயிலில் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், இமெயிலில் மனு அனுப்பபட்டது. இதை ஏற்ற நீதிபதி வழக்கை வாபஸ் பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

இருக்கும் சலுகையை பெற நினைத்து, இருக்கும் நல்ல பெயரை கெடுத்துவிட கூடாது என யோசித்திருக்கிறார் ரஜினி. இதை முதலிலேயே யோசித்திருக்க வேண்டும் அவர். இருக்கும் சலுகையை பெறுவது உரிமை. அந்த உரிமையிலும் கெளரவம் அடங்கியிருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ளும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.

  • நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணபெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here