கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி கல்லூரிகளுக்கு 2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
22
kvp news

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவி;ல் பள்ளி கல்லூரிகளுக்கு 2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா யூனியன் கிளப் வளாகத்தில் வைத்து நடைபெற்றது.விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் ஆசியாபார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார்.

ரோட்டரி மாவட்ட துனை ஆளுநர் பாபு முன்னிலை வகித்தார். செயலாளர் ரவிமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.விழாவில் ரோட்டரி சங்க தலைவராக பரமேஸ்வரன், செயலாளராக முத்துமுருகன், பொருளாராக விநாயகா ரமேஷ், துனைத்தலைவராக நாராயணசாமி, இனைசெயலாளராக பிரபாகரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். ரோட்டரி புதிய 8 உறுப்பினர்களுக்கு ரோட்டரி மாவட்ட துனை ஆளுநர் பாபு பதவி பிரமாணம் செய்துவைத்தார். ரோட்டரியின் ஆண்டு மலரை ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் டாக்டர்.சண்முகம் வெளியிட, ரோட்டரி மாவட்ட துனை ஆளுநர் பாபு பெற்றுக் கொண்டார்.

ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் டாக்டர்.சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 1லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் உபகரணங்களையும், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மின்விசிறி, மனோ கல்லூரிக்கு இருக்கைகளும்,பூவலிங்கச்செட்டியார் துவக்கப் பள்ளிக்கு வாஷிங் சிங்க், கயத்தார், பாண்டவர்மங்கலம் அரசு கிளை நூலகத்திற்கு நூல் அலமாரிகளும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைகளும் 2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கோவில்பட்டியில் சிறப்பாக சமுக பணிகளைச் செய்த ஜுவ அனுக்கிரக அறக்கட்டளை, துளிர் இளைஞர் சக்தி அமைப்புகளுக்கு சேவை விருது வழங்கப்பட்டது.

விழாவில் புதிய தலைவர் பரமேஸ்வரன் ஏற்புரை வழங்கினார். விழாவில் கோவில்பட்டி பொது நல அமைப்பு நிர்வாகிகள் ரோட்டரி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் முத்துமுருகன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here