தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 3 வயது சிறுவன் பலி – கோரம்பள்ளம் அருகே பரிதாபம்

0
15
crime

தூத்துக்குடி மாவட்டம், கோரம்ப்பள்ளம் அருகே கே.சுப்பிரமணியபுரம் ஊரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி பிளாண்டா. இவர்களது மகன் ஜெஸ்லின் சாமுவேல் (வயது 3). ராஜ்குமார் – பிளாண்டா தம்பதியருக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்னர்தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் இன்று வீட்டின் பின் புறத்தில் பிளாண்டா மற்றும் ராஜ்குமாரின் தாயார் இணைந்து பெண் குழந்தையை குளிப்பாட்டினராம். அப்போது வீட்டின் முன்பகுதியில் ஜெஸ்லின் சாமுவேல் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். குளிப்பாட்டிய பிறகு தலையை துடைத்துவிட துணி எடுப்பதற்காக பிளாண்டா வீட்டின் முன்பகுதிக்கு சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு இருந்த பிளாஸ்டிக் டிரம்ப்பில் தவறி விழுந்த நிலையில் ஜெஸ்லின் சாமுவேல் கிடந்திருக்கிறார். அச்சிறுவனை உடனே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அச்சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர்.

தங்கை பிறந்து 28 நாட்களே ஆன நிலையில் அண்ணன் இறந்திருப்பது அக்குடும்பத்தை மட்டுமல்ல அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here