போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – கிராம நிர்வாக அலுவலருக்கு பாராட்டு விழா

0
168
srivaikundam news

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்த பண்டாரம் என்பவரது மகன் சிவராமன்(35). முறையான சாலை வசதியும் போக்குவரத்து வசதியும் இல்லாத கிராமப் பகுதியில் பிறந்து 10 சகோதர, ககோதரிகளுல் ஒருவராக வறுமையான சூழ்நிலையில் வளர்ந்த சிவராமன் கருங்குளம் அரசுப் பள்ளியில் பயின்று தற்போது கால்வாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

தான் வாழ்ந்த வறுமையான வாழ்வினை கிராம புற மாணவர்கள் வாழக்கூடாது என்பதற்காக கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்ற 2015ம் ஆண்டு முதல் தான் பணிபுரியும் கிராமத்தில் இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.

கடந்த 2015ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள வெள்ளூர் கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்த பின்னர், அப்பகுதி இளைஞர்களுக்கு இலவசமாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியினை அளிக்கத் தொடங்கியுள்ளார். சிவராமன் தான் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கி, அப்பகுதி இளை–ஞர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்தும் விதமாக இரவிலும் இலவசமாக வகுப்புகளை எடுத்து வருகிறார்.

கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய தாசில்தார் சந்திரன் பரிந்துரையின் பேரில் சிவராமனுக்கு சிறந்த கிராம நிர்வாக அலுவலருக்கான சான்றிதழை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

தற்போது கால்வாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் சிவராமன், சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமபுறங்களில் வசிக்கும் இளைஞர்களுக்கு முககவசத்துடன் சமூக இடைவெளிகளை பின்பற்றி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியினை எடுத்து வருகிறார். தற்போது வரை போலீஸ், ரெயில்வே, இராணுவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் 82 பேர் சிவராமனிடம் பயிற்சி பெற்றவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவரது, தொடர் முயற்சிகளுக்கான பாராட்டு விழா கால்வாய் கிராமத்தில் நடைபெற்றது. கால்வாய் ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமலிங்கம் சேகர் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சிவக்குமார், செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாசில்தார் கோபால கிருஷ்ணன் பேசுகையில், அரசுசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுவதுடன் தேர்ச்சி பெற்ற பின்னர், மக்களுக்கு சேவையாற்றும் துறைகளை தேர்ந்து எடுத்து பணியாற்ற வேண்டும் என்றார். கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here