கோவில்பட்டியில் புதிய நியாயவிலை கடைகள் – அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

0
42
minister kadambur raju

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறு ஒன்றியம் கொப்பம்பட்டி ஊராட்சி பரசுராமபுரம், கோவில்பட்டி ஒன்றியம் இடைசெவல் ஊராட்சி கார்த்திகைப்பட்டி, ஊத்துப்பட்டி ஊராட்சி குமராபுரம் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (16.10.2020) நடைபெற்றது.

இவ்விழாவில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, அம்மா நகரும் நியாய விலைக்கடையினை துவக்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமை பொருட்களை வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, ’’தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 20ம் தேதி சென்னையில் தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை துவக்கி வைத்தார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மொத்தம் 84 கிராம பகுதிகளுக்கு அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று வழங்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 12,000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று உள்ளார்கள். மேலும் இதில் ஒரு சில சிறிய கிராம பகுதிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிமைப்பொருட்கள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று கயத்தாறு ஒன்றியம் கொப்பம்பட்டி ஊராட்சி பரசுராமபுரத்தில் 80 குடும்ப அட்டைதாரா;கள் பயன்பெறும் வகையிலும், கோவில்பட்டி ஒன்றியம் இடைசெவல் ஊராட்சி கார்த்திகைப்பட்டியில் 70 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும், ஊத்துப்பட்டி ஊராட்சி குமராபுரத்தில் 150 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

24.02.2014 அன்று சென்னையில் முதன்முதலாக நகரும் நியாய விலைக்கடைகளை துவக்கி வைத்தார்கள். அம்மா வழியில் வந்த முதலமைச்சர் நியாய விலைக்கடை அதிகம் தூரம் உள்ள கிராமப்பகுதிகளுக்கு இத்திட்டத்தினை தொடங்கி வைத்து இதற்கு அம்மா நியாய விலைக்கடை என்று பெயர் வைத்துள்ளார்கள். பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியிலேயே குடிமைப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வழங்கும் உன்னத திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கியுள்ளார்கள்.

அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் மூலம் தங்கள் பகுதிக்கு குடிமைப்பொருட்கள் வழங்கப்படும் நாள் தங்களுக்கு தெரிவிக்கப்படும். வாகனம் வரும் அன்று அனைவரும் குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். அன்று பல்வேறு சூழ்நிலையில் குடிமைப்பொருட்கள் வாங்க இயலாதவர்கள் வெளியூர் செல்ல வேண்டிய பணிகள் உள்ளவர்கள் மற்ற தினங்களில் தங்களது பகுதியில் உள்ள தாய் நியாய விலைக்கடைகளில் குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

மனித இனத்திற்கே மாபெரும் அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் வந்த பிறகு கடந்த 7 மாதங்களாக சுய ஊரடங்கை கடைபிடித்து எந்த வழியில் எல்லாம் மக்களை காக்க முடியும் என்று அரசு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. அதன் காரணமாக கொரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவா;கள் 98 சதவீதத்திற்கு மேலாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். அரசு சிறப்பான சிகிச்சைகள் வழங்கி மக்களை பாதுகாத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு வளர்ச்சி திட்ட பணிகள் மிக துரிதமாக நடைபெற வேண்டும், போர்க்கால அடிப்படையில் எப்படி கொரோனா தடுப்பு பணிகள் நடைபெறுகிறதோ அதேபோல வளர்ச்சி திட்ட பணிகளும் தடைபடாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார். அந்த வகையில் இன்று அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டு கிராமங்கள்தோறும் மக்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி குடிமைப்பொருட்கள் சென்று சேர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் வெகுதூரம் சென்று குடிமைப்பொருட்கள் வாங்கும் நிலை மாறி மக்கள் இருக்கும் இடத்திலேயே குடிமைப்பொருட்கள் கிடைக்க அம்மா அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டம் மக்களிடையே எழுச்சியையும், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

நமது மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது, நேற்றைய தினம் கூட புதிய வரலாறாக தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டியல் இனமக்கள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தினை காணொலி காட்சி மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திறந்து வைத்தார். இதன் மூலமாக விரைவாக நீதி கிடைத்திட மக்களுக்கு ஏதுவான நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி அனைத்து துறைகளிலும் நமது மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே நீங்கள் என்றும் அம்மா அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ரவிசந்திரன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூ சுப்புராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிசாமி, வட்டாட்சியர் பாஸ்கரன் (கயத்தாறு), மணிகண்டன் (கோவில்பட்டி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பானு வடக்கு வண்டானம் கூட்டுறவு சங்க தலைவர் பொன்னுச்சாமிபாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் கிருபாகரன், கார்த்திகைபட்டி ஊராட்சி தலைவர் ரெங்கநாயகி, முக்கிய பிரமுகர்கள்; வண்டானம் கருப்பசாமி, அய்யாத்துரைபாண்டியன், கணேசபாண்டியன், ராமச்சந்திரன், சுப்புராஜ், குருராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here