இஸ்லாமிய திருமண பதிவாளர்களாக அரசு ஹாஜிகளை நியமிக்க வலியுறுத்தல்

0
7
srivai news

தூத்துக்குடி, அக். 17: இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்யும் திருமண பதிவாளராக அரசு ஹாஜிகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு மாவட்ட ஹாஜிகளின் கூட்டமைப்பு நிர்வாகக் குழு கூட்டம் தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாநில தலைவர் சலாஹூதீன் ஆலீம் தலைமை வகித்தார். கூட்டமைப்பு செயலர் முஜிபூர் ரஹ்மான், பொருளாளர் முகமது கஸாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின்போது, தமிழ்நாடு அரசு ஹாஜிகள் அனைவரும் இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்கிற திருமண பதிவாளராக தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள வக்பு சொத்துக்களை பாதுகாத்திடவும் அதே மேம்படுத்தவும் அந்த மாவட்ட ஹாஜிகளின் தலைமையில் மாவட்ட வக்பு கண்காணிப்பு குழு உருவாக்க வேண்டும், அரசு ஹாஜிகள் நியமிக்கப்படாத மாவட்டங்களில் துரிதமாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், கடலூர் மாவட்ட அரசு ஹாஜி நூருல் அமீன் ஆலிம், கன்னியாகுமரி மாவட்ட அரசு ஹாஜி அபு ஸாலிஹ் ஆலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here