புதுக்கோட்டையில் இளைஞரணி சார்பில் அ.தி.மு.க. 49வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

0
99
admk news

சாயர்புரம் அக்.18-

புதுக்கோட்டையில் அ.தி.மு.க. வின் 49 வது ஆண்டு துவக்க விழாவினை ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

புதுக்கோட்டையில் அ.தி.மு.க 49 வது ஆண்டு துவக்க விழா தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி ஒன்றிய எம்.ஜி.ஆh; இளைஞரணியினா; கொண்டாடினா;. இவ் விழாவிற்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் குமாரகிரி பஞ்சாயத்து தலைவருமான ஜாக்சன் துரைமணி தலைமை வகித்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மேலும் 49 வது ஆண்டில் முதலமைச்சர் எடப்பாடியை மீண்டும் முதல்வராக்க அனைவரும் உறுதி செய்து இன்று முதல் அயராது ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என கட்சியினரைக் கேட்டுக் கொண்டார். விழாவில் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சோமு, முன்னாள் ஊராட்சி செயலாளர் துரைராஜ், பஜார் செயலாளர் நயினார், மாரியப்பன், சின்ன மாரியப்பன், பழக்கடை பொன்துரை, நெல்சன் சிறுபான்மையினர் பிரிவு குருராஜன் மகளிரணி தங்கராஜாத்தி, தங்கம்மாள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய எம்.ஜி. ஆர் இளைஞரணியினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here