புதுக்கோட்டையில் அ.தி.மு.க. 49வது ஆண்டு துவக்க விழா – ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்றம் ஏற்பாடு

0
84
admk

சாயர்புரம் அக்.18-

தூத்துக்குடி மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்; மன்றத்தின் சார்பில் புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு அ.தி.மு.க 49வது ஆண்டு துவக்க விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க. வை எம்.ஜி.ஆர். துவங்கி 48ஆண்டுகள் நிறைவடைந்து 49வது ஆண்டு துவங்கியுள்ளது. இதை அக் கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதே போல் புதுக்கோட்டையில் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்றத்தின் சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிவமாடசாமி தலைமை வகித்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க கொடியேற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் பேரூரணி சங்கரலிங்கம் வரவேற்றுப் பேசினார் . நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் மகிழம்புரம் மாதவன்ராஜ், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் அல்லி கணேசன், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கல்லன்பரும்பு ஆறுமுகம், நடுக் கூட்டுடன்காடு கிளை செயலாளர் நடராஜன், ஒன்றிய ஜெ பேரவை துணை செயலாளர் ஆண்டாள் நகர் பெருமாள்,

துணை தலைவர் ஆறுமுகம் நகர் ராஜசேசர், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் திம்மராஜபுரம் பிரம்மராஜ், புதுக்கோட்டை குருராஜ், நடுக்கூட்டுடன்காடு கண்ணன், மேலக்கூட்டுடன்காடு கிளை துணை செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here