நாசரேத்தில் வேளாண் சட்டத்தை கண்டித்து நாம்தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

0
13
nazareth

நாசரேத்தில் மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாசரேத், அக்.18: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செந் தூர் தொகுதி மருத்துவர் அணி செய லாளர் விஜய ஆனந்த் தலைமை தாங் கினார். தொகுதி செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். நாம் தமிழர் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இராஜ சேகர், இரத்தினபாண்டி மற்றும் இள. மாரியப்பன், நவீன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினராக மாநில இளை ஞர் பாசறை செயலாளர் சி.த.மதிவா ணன் கலந்துகொண்டு கண்டன உரை யாற்றினார். இதில் கு.ம.இராஜேந்தி ரன் பிரேம்குமார்,ஜெயசீலன், அனிதா, சோபி, கல்யாண சுந்தரம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் அபுபக் கர் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here